ETV Bharat / state

அதிமுக திமுக என்னுடன் விவாதிக்கத் தயாரா? - அன்புமணி கேள்வி - kancheepuram election campaign PMK

நீட், மதுவிலக்கு குறித்து அதிமுக திமுக என்னுடன் விவாதிக்கத் தயாரா என காஞ்சிபுரத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கேள்வி!
அன்புமணி ராமதாஸ் கேள்வி!
author img

By

Published : Feb 15, 2022, 3:35 PM IST

காஞ்சிபுரம்: புதியதாகத் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம், அவர்களை ஆதரித்த தேர்தல் பரப்புரை கூட்டமானது காஞ்சிபுரம் மண்டித் தெரு பகுதியில் நடைபெற்றது.

இதில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாகத் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அன்புமணி பேசுகையில்,

“நீட் குறித்து பொது விவாதம் செய்ய திமுக அதிமுக தயாராக உள்ள நிலையில் நான் விவாதிக்கத் தயாராக உள்ளேன். நீட்டுக்கு காரணம் யார் என்று நான் கூறுகின்றேன். அது குறித்து மக்கள் முடிவு செய்துகொள்வார்கள்.

நீட்டுக்கு முதல் காரணம் காங்கிரஸ்தான். இரண்டாவது காரணம் திமுக. மூன்றாவது காரணம் பாஜக. நான்காவது காரணம் அதிமுக. நீட்டிற்கு இவர்கள் நால்வரும்தான் காரணம்.

மு.க. ஸ்டாலின் நீட் குறித்து விவாதம் செய்ய நாங்கள் தயார் என்று சொல்லுகிறார். அந்தச் சவாலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும் ஏற்றுக்கொள்கிறார். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். மது விலக்கு குறித்து விவாதிக்க நான் சவால் விடுகின்றேன்" என்றார்.

தமிழ்நாட்டைக் குடிகார நாடாக மாற்றியது யார்?

அன்புமணி பரப்புரை

திமுக அதிமுக விவாதிக்கத் தயாரா? நான் தயார் எனக் குறிப்பிட்ட அவர் இருவரும் வாருங்கள் விவாதிக்க நான் தயார் என்றும் தமிழ்நாட்டில் யார் மதுவை முதலில் கொண்டுவந்தது, எவ்வுளவு காலம் மது விலக்கு தமிழ்நாட்டிலிருந்தது, அதை மீண்டும் தொடங்கியது யார்?

மதுக்கடைகளை டாஸ்மாக் ஆக மாற்றியது யார்? டாஸ்மாக்கிற்கு யார் பார் திறந்தது? பார்களில் குடிகாரன்களாக மாற்றி இந்தத் தமிழ்நாட்டினை குடிகார நாடாக மாற்றியது குறித்து அங்கு விவாதிக்கலாம் என்றும்,

கிணற்றைப் போல் ஏரியைக் காணோம்!

காஞ்சிபுரம் மாவட்டம் என்று சொன்னால் ஏரிகள் நிறைந்த மாவட்டம். இந்தியாவிலேயே அதிக ஏரிகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் இன்றைக்கு ஏரிகளை எங்கே என்று கேட்டால் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் ஏரியை காணோம் கிணற்றைக் காணவில்லை என்பதுபோல்தான் உள்ளது.

ஆக்கிரமிப்புகளால் ஏரிகள் காணாமல் போய்விட்டன. ஏரியின் முக்கியத்துவம் இவர்களுக்குத் தெரியவில்லை. மேலும் காஞ்சிபுரம் என்றாலே கோயில்கள்தான் ஞாபகத்திற்கு வரும்.

இன்றைக்குக் காஞ்சிபுரம் என்று சொன்னால் கோயிலுக்குப் புகழ்பெற்றது என்பது மாறி தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்யும் 90 விழுக்காடு சாராய தொழிற்சாலைகள் இயங்கும் மாவட்டமாகத்தான் காஞ்சிபுரம் உள்ளது. இது வெட்கக்கேடு, இதுவா காஞ்சிபுரத்திற்குப் பெருமை எனக் கேள்வி எழுப்பியவர்.

பாலைவனமான பாலாறு!

அதிலும் குறிப்பாக 90 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காட்டை அனுமதி கொடுத்தது கருணாநிதியின் ஆட்சியில். இவர்களுக்கு மக்களைப் பற்றியோ பெண்களைப் பற்றியோ அடுத்த தலைமுறை பற்றியோ எவ்வித கவலையும் இல்லை. இவர்களுடைய கவலை எல்லாமே டாஸ்மாக் மூலம் வருகின்ற வருமானம்தான்.

பால்போன்ற ஆறாக இருந்த பாலாறு இன்றைக்குப் பாலைவனமாக உள்ளது. இதற்குக் காரணம் திமுக அதிமுகதான். 55 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற கட்சிதான் இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அது எப்படி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்ற முடியும் ?- ப. சிதம்பரம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.