ETV Bharat / state

மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற 'சர்வதேச பழங்குடி மக்கள் தினம்' - irular

காஞ்சிபுரம்: பழங்குடி மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச பழங்குடி மக்கள் தினம் மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

kalai
author img

By

Published : Aug 10, 2019, 4:14 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று சர்வதேச பழங்குடி மக்கள் தினம்( ஆகஸ்ட் 9) கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பாக மாபெரும் கலைவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் தலைவர் க.ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

இவ்விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல ஆணையர் எல்.தனலட்சுமி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், இவ்விழாவில் ஆடல்பாடல், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் நாள் பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் உரிய உரிமைகளை பெறுவதற்காகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

கலை விழா

இருளர், மலைக்குறவர், நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் கோரிக்கைகளான, வன உரிமை பாதுகாப்பு சட்டம், சாதிச் சான்றிதழ், குடிமனை கொடி மனைப்பட்டா, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, இலவச மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று ஆகஸ்ட் 9 சர்வதேச பழங்குடிமக்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது அதில் ஒரு பங்காக இன்று மாமல்லபுரத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பாக மாபெரும் கலைவிழா நடைபெற்றது இவ்விழாவில் க.ஜெகதீசன் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக எல் தனலட்சுமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் அவர்கள் மற்றும் நஞ்சப்பன் எக்ஸ் எம்எல்ஏ டாக்டர் தமிழ் வழி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்

Body:இவ்விழாவானது ஆண்டுதோறும் பழங்குடி மக்களுக்காக ஒரு அங்கீகாரம் வகிக்க வேண்டும் என்று அவருக்கு உரிய உரிமைகளையும் பெறுவதற்கான ஒரு நாளாக ஆகஸ்ட் 9ம் தேதி ஒதுக்கப்பட்டது இவ்விழா சர்வதேச பழங்குடி மக்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருடந்தோறும் கொண்டாடப்படுகின்றது.இருளர் மலைக்குறவன் நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடி மக்களின் கோரிக்கைகளான வன உரிமை பாதுகாப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் சாதி சான்றிதழ் குடிமனை கொடி மனைப்பட்டா வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு ரேஷன் கார்டு தொகுப்பு வீடு இலவச மின் இணைப்பு சாலை வசதி குடிநீர் தெருவிளக்கு முதியோர் உதவித் திட்டம் நலவாரிய அட்டை கல்வி வேலைவாய்ப்பு ஆகிய வைகளை வலியுறுத்தியும் அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பெறுவதற்காகவும் ஒரு நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் ஆடல் பாடல் நாட்டுப்புற கலைகள் என பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு சிறப்பித்தனர்.

Conclusion:இவ்வளவில் பழங்குடி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இவ் விழாவினை சிறப்பித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.