காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி முதல் தொடக்குகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி ஊராட்சியில் 188 மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துக்கொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் கலந்துக்கொள்வதை குறிக்கும் வகையில் 188 மரகன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மரக்கன்றுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடன் இணைந்து 200-க்கும் மேற்பட்ட மகளிர் நடவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - 4 மாவட்டங்களுக்கு விடுமுறை