ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறப்பு - காஞ்சி கலெக்டர் ஆய்வு - The lake is getting water as per the status

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீரானது இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலையில் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செம்பரம்பாக்கம் ஏரியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறப்பு- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

author img

By

Published : Nov 2, 2022, 8:27 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழையையொட்டி பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று(நவ.02) காலை நிலவரப்படி ஏரிக்கு நீர் வரத்தானது 1,180 கன அடியாகவும், ஏரியின் முழுக்கொள்ளளவான 24 அடியில் 20.64 அடி கொள்ளளவை நீர் எட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தொடர் நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் 3 மணி அளவில், முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிவித்திருந்தார். அதற்கான முன்னேற்பாடுகளில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகின்றது என்பதனை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு, அதன்பின் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீரானது முதற்கட்டமாக திறந்துவிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி முன்னிலையில், ஏரியின் இரண்டாவது மதகு திறக்கப்பட்டு அதன் வழியாக தற்போது விநாடிக்கு 100 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செம்பரம்பாக்கம் ஏரியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தெரிவிக்கையில், 'செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பிற்கு ஏற்றார்போல் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதேபோல் ஏரியில் நீர் வரத்து குறைந்தால் அதற்கேற்றார் போல் நீர் திறப்பு அளவு குறைக்கப்படும்.

மேலும் தற்போது ஏரியில் நீர் வரத்தானது ஆயிரம் அடிக்குக்கீழ் சுமார் 970 கன அடியாக உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியினை பொதுப்பணித் துறையினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறப்பு- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்கள் மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உடனடியாக அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை - அந்தமான் இடையே விமானசேவை முற்றிலும் நிறுத்தம் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.