ETV Bharat / state

காஞ்சிபுரம் பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி: ஐவர் கைது - குற்றச் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்று தப்பியோடிய ஐந்து பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

பெட்ரோல் பங்க் கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காணொலி

author img

By

Published : Nov 23, 2021, 9:58 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூரில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்குகிறது. இங்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் இந்த பெட்ரோல் பங்கிற்கு நேற்று முன்தினம் (நவம்பர் 23) நள்ளிரவில் ஐந்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அப்போது பெட்ரோல் பங்கில் படுத்திருந்த ஊழியரிடம், திருவண்ணாமலை பருவதமலைக்குச் செல்ல வழி கேட்டுள்ளனர். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்களும் பதிலளித்துள்ளனர். அப்போது திடீரென கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற ஐந்து பேரும், தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் மணிகண்டனை சரமாரியாக வெட்டினர்.

பெட்ரோல் பங்க் கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காணொலி

இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஓட்டம்

மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பெட்ரோல் பங்கை நோக்கி ஓடிவந்தனர். இதனைக்கண்ட கொள்ளையர்களில் மூன்று பேர், இரு சக்கர வாகனமொன்றில் தப்பிச் சென்றனர். மற்ற இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு இருட்டில் ஓடி மறைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஐந்து பேரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 22) வேகவதி பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூன்று பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மூவரும் சென்னையைச் சேர்ந்த ஜெகன்ராஜ் (20), இமானுவேல் (18), பிரவின் (18) ஆகியோர் என்பதும், இவர்களே பெட்ரோல் பங்க் கொள்ளை முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் கொள்ளையில் தொடர்புடைய மேலும் இருவரையும் தேடும் பணியிலும் காவல்துறையினர் இறங்கினர்.

செல்போன் திருட்டும் அம்பலம்

அப்போது கீழம்பி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சென்றுகொண்டிருந்த சதிஷ் (23), பாலாஜி ராஜா (19) ஆகியோரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் இருவருமே பெட்ரோல் பங்க் கொள்ளை முயற்சியில் தப்பிய மேலும் இருவரும் எனத் தெரியவந்தது.

பின்னர் ஐந்து பேரிடமும் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், இவர்கள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்த்திரம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள், பட்டா கத்தி உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன. கொள்ளை முயற்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைதுசெய்த காவல் துறையினருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் வைரலாகும் பாலியல் குற்றச்சாட்டு; அரசு பள்ளி ஆசிரியரை முற்றுகையிட்ட பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.