ETV Bharat / state

ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது! - ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக

காஞ்சிபுரம்: வேளாண்மை சட்டங்களைக் கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

author img

By

Published : Dec 14, 2020, 3:48 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்பிப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்களை எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களைக் கண்டித்தும், அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணியுங்கள் என கோஷமிட்டவாறு காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

போராட்டத்தில் ஈடுபட வந்த கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தடையை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க...முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.