ETV Bharat / state

வரம்பு மீறி அரசு பணம் செலவு: 2 ஊராட்சி தலைவர்கள் அதிகாரம் பறிப்பு! - காஞ்சிபுரம் செய்திகள்

ஊராட்சி நிதியில் ஏறத்தாழ 85 லட்ச ரூபாயை வரமுறையின்றி செலவிட்டதாக காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு மற்றும் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களை பறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

சாவித்திரி - தமிழ் அமுதன்
சாவித்திரி - தமிழ் அமுதன்
author img

By

Published : Dec 1, 2022, 4:23 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சாவித்திரி என்பவர் உள்ளார். ஊத்துக்காடு ஊராட்சியில், சுகாதார வளாக பராமரிப்பு, பிளீச்சிங் பவுடர் கொள்முதல், ஊராட்சி மன்ற கட்டடம் பழுது பார்த்தது, சாலை மேம்பாட்டு பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் குடிநீர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டதில் முறைகேடு நடந்ததாக புகார் வந்துள்ளது.

ஊராட்சி தலைவருக்கான அதிகாரத்தை மீறிய சாவித்திரி, லட்சக்கணக்கில் நிதி செலவிட்டதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து தணிக்கை பணியில் ஈடுபட்ட கடந்த ஒராண்டில் 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், சாவித்திரி செலவிட்டதாக கணித்துள்ளனர்.

வரம்புக்கு மீறி ஊராட்சி நிதியை செலவிட்டதாக சாவித்திரியின் ஊராட்சி தலைவருக்கான அதிகாரங்களை பறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி:

அதேபோல், குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனுார் ஊராட்சி மன்றத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தமிழ் அமுதன் என்பவர் உள்ளார். இவரும் ஊராட்சிக்கு எல்.இ.டி. விளக்குகள் வாங்கியது, மின்சாதன குப்பை வண்டி வாங்கியது, ஊராட்சி மன்ற கட்டடம் பராமரிப்பு செய்தது, வாகன நிறுத்துமிடத்தில் ஷெட் அமைத்தது, புதிய பணியாளர்களை நியமனம் செய்தது, பூங்கா பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தது, குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தது ஆகிய பணிகளுக்காக கடந்த ஓராண்டில் 68 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை வரைமுறையின்றி செலவிட்டதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரே ஆண்டில் ஊராட்சியின் நிதியில் அதிகாரத்துக்கு மீறி செலவிட்டதாக தமிழ் அமுதனின் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் கூறியிருப்பதாவது, ஊராட்சி சட்டம் பிரிவு 202, 203, 204 மற்றும் 205-ன் கீழ், ஊராட்சி மன்ற தலைவருக்கான கடமை மற்றும் பொறுப்புகள், வரையறைக்குட்பட்ட சட்டப் பிரிவுக்குள் செயல்பட தவறியதால் ஊராட்சி மன்றம் தற்காலிக முடக்கம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்காடு ஊராட்சித் தலைவர் வாக்குவாதம் வீடியோ வெளியீடு

இதையடுத்து ஊராட்சி நிதியை மேலாண்மை செய்யும் பொறுப்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி எந்த நிதியும் செலவிட முடியாது என்றும், காசோலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கையெழுத்திடும் அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக அலுவலகத்தில் பாதுகாப்பு குறைபாடா? போலி அட்டையுடன் முதல்வரை நெருங்கிய நபரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.