ETV Bharat / state

தீ விபத்து மீட்புப் பணி: மாடியிலிருந்து தவறிவிழுந்து ஊழியர் காயம்

தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் சிக்கிக்கொண்ட ஊழியர்களை மீட்கும் பணியின்போது, ஊழியர் ஒருவர் சரியான பிடிமானம் இன்றி கீழே தவறிவிழுந்து காயமடைந்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரைப் பதைபதைக்கச் செய்துள்ளது.

தீ விபத்து மீட்பு பணியின்போது ஊழியர் ஒருவர் தவறி விழுவது தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 1, 2021, 8:55 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவலூர்குப்பம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான ஹோம் சீட்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அனைத்து கார் தொழிற்சாலைகளுக்கும் சப்ளை செய்யப்படுவதுடன், ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தத் தொழிற்சாலையில் ஷிஃப்ட் அடிப்படையில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர்.

தீ விபத்து மீட்புப் பணியின்போது ஊழியர் ஒருவர் தவறிவிழுவது தொடர்பான காணொலி

2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்

இந்நிலையில் நேற்று (செப். 30) இரவு திடீரென தொழிற்சாலையின் குடோனில் தீப்பிடித்தது. பின்னர் தீயானது தொழிற்சாலையின் மூன்று தளங்களிலும் அடுத்தடுத்து மளமளவெனப் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர், உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் சிக்கிக்கொண்ட இரண்டு ஊழியர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

தவறிவிழுந்து காயமடைந்த ஊழியர்

அப்போது கயிறு மூலம் மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர், சரியான பிடிமானமின்றி மாடியிலிருந்து கீழே தவறிவிழுந்து காயமடைந்தார். இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் கானொலியாகப் பதிவுசெய்தனர்.

தற்போது இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி, காண்போரைப் பதைபதைக்கச் செய்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், மின்கசிவாலேயே விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமானதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'காதலை மறுத்த பெண்' கல்லூரி வளாகத்தில் கொடூரக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.