காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு அனைத்து வித சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன .
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் பல்வேறு நோயாளிகள் தங்களது உடல் உபாதைகளுக்கு கொட்டும் மழையில் உள்நோயிக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு மருத்துவ அறைக்குச் சென்றபோது, நீண்ட நேரமாக மருத்துவர் வரவில்லை எனப்புகார் எழுந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து நோயாளிகள் விசாரித்தபோது, அருகில் உள்ள அறையில் மருத்துவர் ஒருவரின் பிறந்த நாளை அங்கிருந்த பிற மருத்துவர்கள், மருத்துவமனை அறையில் வைத்தே கூச்சலிட்டுக் கொண்டாடியது தெரிய வந்தது.
இதனைக்கண்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த செவிலியர், மருத்துவ உதவியாளர்களிடம் கேட்டபோது தங்களால் எதுவும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் செயல்பட வேண்டிய நிலையில், தனது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்தது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:
வடகலையா... தென்கலையா... ஐயங்கார்களுக்கிடையே தொடரும் சிக்கல்! பக்தர்கள் கவலை