ETV Bharat / state

நோ சூடு, நோ சொரணை...! - டி.ஆர். பாலு கலகல - டி.ஆர்.பாலு தேர்தல் பிரச்சாரம்

காஞ்சிபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்களவை உறுப்பினரும், திமுகவின் பொருளாளருமான டி.ஆர். பாலு பரப்புரை மேற்கொண்டார்.

”நோ சூடு, நோ சொரணை..!” - நித்தியானந்தா பானியில் டி.ஆர்.பாலு கல கல

author img

By

Published : Feb 13, 2022, 2:40 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், பிள்ளையார் பாளையம், சின்ன காஞ்சிபுரம், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் டி.ஆர். பாலு இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

சுயமரியாதை இல்லாதவர்கள்தான் கட்சி நிர்வாகியாக இருக்க முடியும்

பரப்புரை கூட்டத்தில் டி.ஆர். பாலு பேசுகையில், “காஞ்சிபுரத்தில் பல்வேறு முக்கியப் பகுதியில் வேட்பாளருக்குச் சீட்டு கிடைக்காத விரக்தியில் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீட் கிடைக்காத விரக்தியில் திட்டிவருவதால் எந்தப் பயனும் இல்லை, இது எல்லாம் கட்சித் தலைமைதான் முடிவுசெய்கிறது.

தொண்டர்களிடம் மானம், ஈனம், சுயமரியாதை இழந்தவர்கள்தாம் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும். சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியில் பணியாற்றாவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், திராவிட கட்சிகளுடன் இருந்தால் மட்டுமே உங்களுக்கு முகவரி உண்டு, இல்லை என்றால் நீங்கள் யார் என்று தெரியாது.

நோ சூடு, நோ சொரணை...! - டி.ஆர். பாலு கலகல

குளத்தில் இருக்கும் வரைதான் மீனுக்கு சக்தி

எடுத்துக்காட்டாக நான், டி.ஆர். பாலு பெரிய ஆளாக இருக்கலாம், அகில இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கலாம், நாடாளுமன்றத்தில் மோடியின் பிடரியைப் பிடித்து இழுக்கலாம்.

ஆனால் டி.ஆர். பாலு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்குற வரைக்கும்தான் திராவிட கழகம் என்ற மரியாதை இருக்கும். குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும் வரைதான் இந்த மீனுக்குச் சக்தி, தரையில் தூக்கிப் போட்டால் கருவாடு ஆகிடும்.

நான் சொல்றது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன், நான் சாதாரணமாகப் பேசவில்லை, கழகப் பொருளாளர் பேசிக் கொண்டிருக்கிறேன், எதையும் மறக்கவும் மாட்டேன் சும்மா இருக்க மாட்டேன்.

யார் சரியாக நடந்துகொள்கிறார்களோ அவர்கள் போற்றப்படுவார், யார் சரியாக நடந்துகொள்ளவில்லையோ அவர்கள் தூக்கப்படுவது மட்டும் இல்லாமல் துச்சமாக நடத்தப்பட்டு செய்ய வேண்டியதைச் செய்வோம்” எனத் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன், மாநகர கட்சி நிர்வாகிகளுடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ராமாயணம், மகாபாரதம் குறித்து பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை - எல். முருகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.