காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஆலந்தூர், உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1872 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
அதேபோல், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் மகேஷ் குமார் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட காலூர் கிராம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியிலும், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சிவிஎம் பி எழிலரசன் வைகுண்டபுரம் தெரு வாக்குச்சாவடியிலும், தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கோபிநாத் தும்பவனம் தெரு அ.க.தங்கவேலர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வாக்கு சாவடியிலும், உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வடிவேல் நகர் தனியார் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
மேலும், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் எம்எல்ஏ சாலவாக்கம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடியிலும், உத்திரமேரூர் தொகுதி அமமுக கட்சி வேட்பாளர் ஆர்.வி. ரஞ்சித்குமார் முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியிலும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்கை செலுத்தினார்கள்.
இன்று காலை 9 மணியளவு நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் தொகுதியில் 12 சதவிகிதமும், காஞ்சிபுரம் தொகுதியில் 11 சதவிகிதமும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 11 சதவிகிதமும், உத்திரமேரூர் தொகுதியில் 13 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இதில் சராசரியாக மாவட்டத்தில் 11.75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி