காஞ்சிபுரம்: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தைப்பூசம் திருவிழா. இவ்விழாவின்போது அனைத்து முருகன் கோயில்களுக்கும் சென்று பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அரசு கோயில்களில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள தடைவிதித்துள்ளது.
தைப்பூசம் திருவிழாவையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் கந்தபுராணம் அரங்கேற்றிய காஞ்சிபுரம் ஸ்ரீ குமரக்கோட்டம் முருகன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், இளையனார் வேலூர் முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்கள் மூடப்பட்டள்ளன.
இந்நிலையில் தைப்பூசம் திருவிழாவையொட்டி வழிபாட்டு நடைமுறையை மாற்ற முடியாத பக்தர்கள் காலை முதலே மூடப்பட்டிருந்த காஞ்சிபுரம் ஸ்ரீ குமரக்கோட்டம் முருகன் கோயில் வாசலுக்கு வந்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கோபுரத்தை தரிசித்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 20-29 வயது நபர்கள் கரோனாவால் அதிகளவில் பாதிப்பு