ETV Bharat / state

விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் - வாரிசுதாரர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கல் - கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றவர்கள் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கேளிக்கை விடுதியில் கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த விவகாரம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வாரிசுதாரர்களுக்கான அரசு வேலை ஆணையை வழங்கினார்.

அரசு வேலைக்கான ஆணை வழங்கிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர்

author img

By

Published : Oct 26, 2022, 7:18 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல தனியார் கேளிக்கை விடுதியில் கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்ய சென்ற கச்சிப்பட்டு கிராமத்தைச்சேர்ந்த மூவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், மூவரின் குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து, ஆறுதல்கூறி இழப்பீடுதொகை மற்றும் வாரிசுதாரர்களுக்கான அரசு வேலை ஆணையையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சத்யம் கிராண்ட் ரெசார்ட் எனும் பிரபல தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள கழிவு நீர்த்தொட்டியை கடந்த 21ஆம் தேதியன்று சுத்தம் செய்ய சென்ற கச்சிப்பட்டு கிராமத்தைச்சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன் குமார் (28), திருமலை(22) ஆகிய மூவரும் விஷவாயு தாக்கி, மூச்சுத்திணறல் அடைந்து கழிவு நீர்த்தொட்டியிலேயே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கேளிக்கை விடுதியின் மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய இருவரையும் கைது செய்தும், தலைமறைவாகவுள்ள கேளிக்கை விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தியை தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹால்டர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி முன்னிலையில் தனியார் கேளிக்கை விடுதியின் வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவு நீர்த்தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் கச்சிப்பட்டு கிராமத்திற்குச்சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த நிறுவனத்தின் சார்பாக மூன்று குடும்பங்களுக்கும் இழப்பீடு தொகையாக தலா 15 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு ஆதிதிராவிட நல வாரியம் சார்பாக தலா ரூ.12 லட்சமும் என தலா ரூ.27 லட்சம் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது. இதில் ஏற்கெனவே ரூ.5 லட்சம் இழப்பீட்டுத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹால்டர் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் தலா ரூ.16 லட்சம் இழப்பீட்டுத்தொகையை வழங்கினார்.

விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் - வாரிசுதாரர்களுக்கு இழப்பீட்டுத்தொகை, பணி நியமன ஆணையை வழங்கிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்டர்

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள வாரிசுதாரருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையையும் அவர் வழங்கினார். ஒரு வாரத்தில் மீதமுள்ள 2 குடும்ப வாரிசுகளுக்கு, அரசு வேலைக்கான பணி ஆணையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலவாரியம் மூலம் மீதமுள்ள இழப்பீடு ரூ.6 லட்சமும் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவிக்கையில், 'இதுபோன்று விபத்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கழிவு நீர்த்தொட்டியில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது போன்ற விபத்துகள், உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்பின் சார்பிலும் கட்டணமில்லா சேவை எண்கள் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு; உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் வீட்டில் போலீஸ் திடீர் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.