ETV Bharat / state

சரிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்... அச்சத்தில் மக்கள் - damaged electric polls

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/23-September-2019/4528105_videoo.mp4
author img

By

Published : Sep 23, 2019, 6:29 PM IST

உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து சரிந்து விழும் நிலையில் உள்ளது. உத்திரமேரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் சேதமடைந்த நான்கு மின்கம்பங்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. சில மின்கம்பங்களில் கான்கீரிட் கலவைகள் உடைந்து கம்பிகள் வெளியே நீண்டு எலும்புக்கூடுகள் போல் காட்சியளிக்கின்றன.

அதேபோன்று வேடபாளையம் என்னும் இடத்தில் உள்ள மின்கம்பம் ஒன்றும் உடைந்து அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. காற்று வீசும்போது தலையாட்டி பொம்மையைப்போல் கம்பம் ஆடுவதாகவும் பலத்த காற்று வீசினால், கம்பம் சாய்ந்து விழுந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்கள்

சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்ய அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னையில் கடந்த சில தினங்களுக்குமுன்பு மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலியானார். அதுபோல இப்பகுதியில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Intro:உத்திரமேரூர் பகுதியில் முறிந்தநிலையில் மிரட்டும் மின்கம்பங்கள்: விபரீதங்கள் நடக்கும்முன்பு நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்.

Body:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் உடன்று அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சிலதினங்களுக்கு முன்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் 9 -ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் அவரது தந்தையின் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு பெட்ரோல் நிரப்ப சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபோன்று சென்னையில் தெருநாய்களை உணவு வைக்கச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மின்கம்பம் முறிந்துவிழுந்து பலியானார்.

இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தையே உலுக்கியது, அந்த சம்பவங்களை மறக்கவோ, மறுக்கவோ முடியாது அந்த அளவிற்கு அதிகாரிகளின் அலட்சியமும், மெத்தமெனும் இதுபோன்று பலவுயிர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்கிறது என்பது பொதுமக்களின் குற்றசாட்டு.

அதனை மெய்ப்பிக்கும்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும்வகையில் மின்சாரவாரியத்தின் மின்கம்பங்களும், சாதனங்களும் உள்ளது.

உதாரணமாக:

1 . உத்திரமேரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் வாங்கி அருகே ஒரு மின்கம்பம் அடியில் பாதியாக உடைந்தநிலையில் எப்போது கீழே விழுமோ என்றநிலையில் உள்ளது.அப்படி அசம்பாவிதங்கள் நடந்தால் மிகப்பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இந்த மின்கம்பம்பம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த வாகனம் மோதிய வேகத்தில் அந்த சாலையிலுள்ள நான்கு மின்கம்பங்கள் பல்வேறு இடங்களில் உடைந்தநிலையின் அந்தரத்தில் ஊசலாடிவருகின்றது. அனால் அதிகாரிகள் யாரும் இதைக்கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2 . மின்கம்பத்தில் கான்கிரிட் கலவைகள் உடைத்து எலும்புகூடுகள் போல கம்பிகள் வெளியே தெரியும் கம்பங்களில் செங்கல் கொண்டு சுவர் ஏழுப்பியுள்ளனர் அதிகாரிகள் இருந்தபோதிலும் உத்திரமேரூர் அம்பேத்கார் சிலை அருகே உள்ள மின்கம்பத்தில் கட்டப்பட்ட செங்கல் சுவரானது வாகனங்கள் செல்லும் வேகத்தில் கம்பத்தோடு சேர்ந்து ஆடுவதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

அதேபோன்று வேடபாளையம் என்னுமிடத்தில் மின்கம்பம் உடைத்து அந்தரத்தில் நிற்கிறது. உடைந்த இடத்தில் சுவர் ஏழுப்புவதற்கு பதிலாக அதற்க்கு மேல்பகுதியில் சுவர் ஏழுப்பியதால் சுமைதாங்காமல் காற்றடிக்கும்போதும், சாலையில் வாகனங்கள் வேகமாக போகும்போது அந்த கம்பம் தலையாட்டி பொம்மைபோல ஆடுவதாகவும் ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் பொதுமக்களை குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோன்று உத்திரமேரூர் அரசு மருத்துவமனை ஏதிரேயுள்ள வண்ணாரத்தெருவின் முனையில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்குகளுக்கான கட்டுப்பாட்டு சுவிட்சியின் பெட்டியுள்ளது. அந்தப்பெட்டி பாதுகாப்பின்றி திறந்துகிடக்கின்றது. பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள அந்தஇடத்தில் இதுபோன்று இருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு புகார்கொடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். Conclusion:எனவே அசம்பாவிதங்கள் நடக்கும்முன்பு சம்மந்தப்பட்ட துறை அத்திக்காரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.