கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனாவால் பன்னாட்டு தொழிற்சாலை பணிகள் மீண்டும் பாதிப்படையக் கூடாது என்பதில் உற்பத்தியாளர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட ஆறு சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இங்கு தோராயமாக 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் நடமாடும் வாகனம் அறிமுகம்!