ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் மொத்தமாக 103.40 மிமீ மழைப்பதிவு!

author img

By

Published : Dec 17, 2020, 10:41 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 103.40 மி.மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. விட்டுவிட்டு பெய்துவரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

rain
rain

நிவர், புரெவி புயலால் பெய்த கனமழை கடந்த சில தினங்களாக நின்றிருந்த நிலையில், டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாடு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

காஞ்சியில் தொடர் மழை

காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், தாமல், பாலுசெட்டி சத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு, மாகறல், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர், சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நள்ளிரவிலிருந்து தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது.

இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்லும் பணியாளர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்துவருகின்றனர்.

மழை நிலவரம்

இன்று (டிச. 17) காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 19.8 மி.மீ., ஸ்ரீபெரும்புதூரில், 4.60 மி.மீ., உத்திரமேரூரில் 52 மி.மீ., வாலாஜாபாத்தில் 10 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 13 மி.மீ., குன்றத்தூரில் 4 மி.மீட்டர் என மொத்தமாக 103.40 மி.மீட்டர் அளவு மழைப் பதிவாகியுள்ளது.

சராசரியாக 17.23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக உத்திரமேரூரில் 52 மி.மீட்டரும், குறைந்தளவில் குன்றத்தூரில் 4 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

இதையும் படிங்க: நோடல் அலுவலரை நியமிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.