தமிழ்நாடு அரசு நாளை (ஆக்.31) முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்தை இயங்கலாம் என அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஓரிக்கை பணிமனையில் இருக்கும் பேருந்துகள், நீரினால் சுத்தம் செய்யப்பட்டு, பின் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன.
அதுபோல அனைத்து பேருந்துகளிலும் 50 சதவீத இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கைகளில் இடம்விட்டு எண்ணிக்கை போடும் பணியும் தொடங்கியுள்ளது.
மேலும் பணிக்கு வரும் போது நடத்துநர்கள் மட்டும் ஓட்டுநர்களுக்கும் முறையான வெப்ப பரிசோதனை செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அரசு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து - ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி