காஞ்சிபுரம்: Christmas Celebration in Kanchipuram: உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் நாளையொட்டி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிவருகிறார்கள்.
காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் நாளையொட்டி திரளான கிறிஸ்தவர்கள் தற்போது உலகையே அச்சுறுத்திவரும் ஒமைக்ரான் கரோனாவிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும், கரோனா தொற்று முழுவதுமாக இவ்உலகை விட்டு அகல வேண்டியும் விடிய விடிய சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கொரனாவால் குறைந்த பக்தர்கள் எண்ணிக்கை
ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரார்த்தனையில் இந்தாண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக குறைந்தளவே கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தகுந்த இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் அமைந்துள்ள தூய இதய அன்னை ஆலயத்தில், தற்போது உலகையே அச்சுறுத்திவரும் ஒமைக்ரான் கரோனாவிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும், கரோனா தொற்று முழுவதுமாக இவ்வுலகை விட்டு அகல வேண்டியும், சகோதரத்துவத்தை வலியுறுத்தியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக ஒன்றிணைந்து கலந்துகொண்டு இயேசு கிறிஸ்துவிடம் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றக் கோரி விடிய விடிய தீவிரப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் மனித நேயம், கருணை, அன்பு, சகோதரத்துவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும்விதமாக கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தாண்டும் கரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்த அளவிலே கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Christmas special recipe:'லெமன் பவுண்ட் கேக்' செய்முறைக் காணொலி