காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகின்ற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இரு நாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தை பார்வையிடுவதால், மாமல்லபுரத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலாளிகள் பாதுகாப்பிற்காக புதிதாக வர வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வாகனங்களும் சோதனையிடப்பட்டு அனுப்பப்படுகின்றன. சாலை ஓரங்களில் மக்கள் இருப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சீன அலுவலர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். மொத்தமாக சுமார் பத்தாயிரம் காவலாளிகள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தை காவல்துறையும், புலனாய்வுத் துறையும் தனது கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமரும் சீன அதிபரும் கூட்டாக எந்தெந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கிறார்கள் தெரியுமா?