ETV Bharat / state

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய அரசு குழு ஆய்வு - கோவிட் பரவல் குறித்து மத்திய குழு ஆய்வு

மத்திய அரசின் ஓமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை குழுவினர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
author img

By

Published : Dec 30, 2021, 2:59 AM IST

ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வழங்க மத்திய அரசு, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

மத்திய அரசு அனுப்பியுள்ள குழுவில் உள்ள மருத்துவர்கள் வனிதா, பிரபா, சந்தோஷ், தினேஷ் பாபு ஆகிய நான்கு பேர் கொண்ட மத்திய மருத்துவக் குழுவினர் நேற்று(டிச.29) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை பார்வையிட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்து, கரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை பிரிவு, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக் கூடம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், மருத்துவமனை அதிகாரிகளுடன் மருத்துவமனையின் தேவைகள் குறித்தும், ஓமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

மத்தியக்குழுவின் ஆய்வின் போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சித்திரசேனா, தொற்றுநோய் தடுப்பு இணை இயக்குனர் சம்பத், குடும்ப நலத் துறை துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: டெலஸ்கோப்புகளில் மறைத்து வைரம் கடத்தும் முயற்சியை தடுத்த சுங்கத்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.