ETV Bharat / state

மின் கம்பத்தில் கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - தீ பற்றியது

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அருகே மின்கம்பத்தில் கார் மோதி தீ பற்றியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

car
author img

By

Published : Jul 30, 2019, 2:13 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுபாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. இதனால், மின்கம்பி அறுந்து காரின் மேல் விழுந்து தீ பற்றியது. காரில் நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் இருந்தனர்.

இதையடுத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். மீதமுள்ள அனைவரும் பலத்தை காயத்துடம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மின் கம்பத்தில் மோதி விபத்து!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டியது தெரியவந்தது.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் அருகே மாமல்லபுரத்திலிருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில் கார் ஒன்று தடுப்பு சுவரின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது

Body:மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி எனும் கிராமத்தில் சாலை அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தடுப்பு சுவரின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதியது இதனால் மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கார் மீது விழுந்ததால் கார் தீப்பற்றி கொண்டது இதனை எடுத்து தீயில் சிக்கிக் கொண்டவரை மீட்பதற்கு தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் தீவுடன் போராடி தீயை அணைத்தனர் இதனை அடுத்து காரில் உன் உள்ளிருந்த 4 ஆண்கள் 3 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 8 பேர் பயணம் செய்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார் மீதமுள்ள ஆட்கள் அனைவருக்கும் பலத்தை படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணத்தை ஆலோசித்து வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு காரணம் மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டியது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது இதனிடையே வழக்கு பதிவு செய்து மாமல்லபுரம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரித்து வருகிறார்

Conclusion:அதே இடத்தில் இது நான்காவது முறையாக நடக்கும் விபத்து ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அப்பகுதி இடையே பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் விபத்து தடுப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.