காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிக மற்றும் சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஐந்து சிறார்கள் கஞ்சா, ஒயிட்னர், சொலிஷன் ஆகிய போதைகளுக்கு அடிமையாகிய நிலையில், போதைப் பொருள்களை வாங்குவதற்காக ஒன்று சேர்ந்து பல இருசக்கர வாகனங்களை திருடி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ngo நகரில் தங்கி உள்ள சூரியன் என்பவரின் இருசக்கர வாகனம் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திருந்தது திடீரென மாயமானது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தனர். பின்னர், அதில் கிடைத்த தகவல்களை வைத்து சூரியன் மற்றும் அவருடைய நண்பர்கள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் வாகனத்தை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே தாங்கள் வைத்துள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள மஞ்சள் நிறம் உள்ள என்எஸ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு சிலர் வேறொரு பைக்கை திருட முயற்சித்த போது கையும் களவுமாக சூரியன் மற்றும் நண்பரிடம் மாட்டிக் கொண்டனர். உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு அதுகுறித்து தகவல் தெரிவித்து அந்த கும்பலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில், தாங்கள் அனைவரும் கஞ்சா போதைக்கு அடிமை என்றும் இதுவரை நான்கு பைக்கை திருடி உள்ளதாகவும், அதில் சுமார் இரண்டரை லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனமான R15 இருசக்கர வாகனத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து நெமிலி சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் வெறும் 2000 ரூபாய்க்கு விற்று கஞ்சா வாங்கி புகைத்தோம் என்று கூறியுள்ளனர்.
17 வயது கூட நிரம்பாத சிறார்களிடமிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களான என் எஸ் பல்சர் மற்றும் பல்சர் 220 ஆகிய மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல் - நடந்தது என்ன?