ETV Bharat / state

PPG Shankar Murder: காஞ்சிபுரத்தில் பாஜக மாநில நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை! - PPG Shankar

காஞ்சிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியலின அணி பொருளாளர் பி.பி.ஜி.சங்கர்(PPG Shankar) தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பிபிஜி சங்கர் புகைப்படம்

author img

By

Published : Apr 28, 2023, 10:47 AM IST

Updated : Apr 28, 2023, 10:57 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பி.பி.ஜி.சங்கர்(வயது 42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், மாநில பாஜக எஸ்சி, எஸ்டி அணியின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடியும், தொழிலதிபருமான பி.பி.ஜி.குமரனின் நெருங்கிய உறவினர் இந்த பி.பி.ஜி.சங்கர். இவர் மீது ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் சங்கர் நேற்று இரவு காரில், சென்னையில் இருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நசரத்பேட்டை அருகே அவரது காரை மறித்த மர்ம கும்பல் ஒன்று, காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளது. இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.

அச்சத்தில் பிபிஜிடி சங்கர் காரில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க நெடுஞ்சாலையில் ஓடினார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சங்கரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதையும் படிங்க: Kandaswamy IPS: அமித்ஷாவை கைது செய்தவர்.. அரசியல்வாதிகளை அலற விட்டவர்.. ஓய்வு பெறுகிறார் கந்தசாமி ஐபிஎஸ்!

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்தக் கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பி.பி.ஜி.சங்கர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள வளர்புரம் பகுதியில் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

7 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற வெங்கடேசன் என்பவர் அதிமுகவின் சார்பில் பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் பாஜகவுக்குத் தாவினார். அதன்பிறகு இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெங்கடேசன் வெட்டிக் கொல்லப்பட்டு இன்று 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பி.பி.ஜி.சங்கர் அதே பாணியில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து ஸ்கிராப் எனப்படும் கழிவுகளை எடுப்பதில் தொழில் போட்டி ஏற்பட்டு, அதனால் பி.பி.ஜி.சங்கர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உணவு கழக பெண் ஊழியர் கொலையில் திடீர் திருப்பம்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை அதிரடி!

Last Updated : Apr 28, 2023, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.