காஞ்சிபுரம்: சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஓர் பகுதியாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேனில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி இன்று தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலையின் குடிநீர் கேன்களில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார். மேலும், தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலை உரிமையாளர்களுக்கு அனைத்து குடிநீர் கேன்களிலும் ஒட்டுவதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, உணவுப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘நான் மந்திரவாதி அல்ல செயல்வாதி’ -முதலமைச்சர் சூளுரை