காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 35 நாட்களாக அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரததை பல மணிநேரம் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர்.
முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 36ஆவது நாளான இன்று சுவாமி கரும் ஊதா நிறப்பட்டாடையுடன் காட்சியளிக்கிறார். நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
தரிசன நாட்கள் குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டு இன்று முதல் தரிசன நேரம் இரவு 11 மணியில் இருந்து கூடுதலாக இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நீட்டிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஏற்கனவே அறிவித்திருந்தார்.