ETV Bharat / state

அத்தி வரதர் தரிசனம் காணும் நாள் வந்துவிட்டது! - அத்தி வரதர்

காஞ்சிபுரம்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழாவையொட்டி தமிழக அரசு சார்பில் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

aththivarathar
author img

By

Published : Jun 28, 2019, 7:46 PM IST

உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா ஜூலை 1ஆம் தேதி முதல் 48 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையொட்டி முன்னேற்பாடுகள் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அத்தி வரதர் திருவிழாவிற்காக பல்வேறு துறை சார்பில் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், பஸ் வசதி, பார்க்கிங், சுகாதாரம் உள்ளிட்டவை, 24 மணி நேரமும், தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் காவல்துரையினர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணிகள் திட்ட மாணவர்கள் ஈடுபட இருக்கின்றனர். மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் பணியாற்றும், 2,119 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக, ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும், குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்தி வரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல் நாளே அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாட்கள் கழித்து அத்தி வரதரைத் தரிசிக்கத் திட்டமிட்டுக்கொள்வது நல்லது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அத்தி வரதர் தரிசனம்

உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா ஜூலை 1ஆம் தேதி முதல் 48 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையொட்டி முன்னேற்பாடுகள் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அத்தி வரதர் திருவிழாவிற்காக பல்வேறு துறை சார்பில் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், பஸ் வசதி, பார்க்கிங், சுகாதாரம் உள்ளிட்டவை, 24 மணி நேரமும், தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் காவல்துரையினர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணிகள் திட்ட மாணவர்கள் ஈடுபட இருக்கின்றனர். மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் பணியாற்றும், 2,119 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக, ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும், குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்தி வரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல் நாளே அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாட்கள் கழித்து அத்தி வரதரைத் தரிசிக்கத் திட்டமிட்டுக்கொள்வது நல்லது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அத்தி வரதர் தரிசனம்
Intro:Body:40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவையொட்டி தமிழக அரசு சார்பில் 29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 48 நாட்கள் நடைபெற உள்ளது அதனை ஒட்டி முன்னேற்பாடுகள் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது அத்தி வரதர் திருவிழாவிற்காக பல்வேறு துறை சார்பில் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குளத்தின் அடியில் இருக்கும் அத்திவரதரை எடுக்கும் பணி நீர் அகற்றப்பட்டு தற்போது இருபுறங்களிலும் சேர்களை ஜேசிபி இயந்திரம் மூலமாக அப்புறப்படுத்த பணியும் நடைபெற்று வருகிறது நீர் வெளியேறுவதற்காக ராட்சஸ மோட்டார் மூலம் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள மற்றொரு குளத்திற்கு நீர் மாற்றப்பட்டு அத்திவரதரை எடுக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது அதேபோல் பக்தர்களுக்காக வரிசையில் நிற்பதற்கு மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது கோவில் சுற்றுப்புறம் மற்றும் நான்கு மாடவீதி பகுதிகளிலும் மேற்கூரை அமைக்கப்பட்டு குடிநீர் கேன்கள் அமைக்கப்பட்டு வருகிறது அத்திவரதர் வைக்கப்படும் மண்டபத்தில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஓரிரு தினங்களில் இப்பணி நிறைவு பெறுவோம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அத்திவரதர் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் தற்காலிக மூன்று பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது பக்தர்கள் தரிசனத்திற்காக இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் தரிசனமும் அமைக்கப்பட்டு வருகிறதுதற்போது அத்திவரதர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், பஸ் வசதி, பார்க்கிங், சுகாதாரம் உள்ளிட்டவை, 24 மணி நேரமும், தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில், பாதுகாப்பு ஏற்பாடுகளில், போலீசார், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணிகள் திட்ட மாணவர்கள் ஈடுபட உள்ளனர். மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் பணியாற்றும், 2,119 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட உள்ளதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்தி வரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல் நாளே அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாள்கள் கழித்து அத்தி வரதரைத் தரிசிக்கத் திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

2. 48 நாள்களிலும் அத்தி வரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். வேறு எந்த சிறப்புப் பூஜையும் நடைபெறாது.

3. காலை 5 முதல் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்களுக்கு, மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை, அத்தி வரதரை தரிசிக்கலாம் என, தெரிவித்துள்ளார்.உள்ளூர் பக்தர்கள், ஜூலை, 1 முதல், 3 வரையும், 12 முதல், 24 வரையும், ஆகஸ்ட், 5 முதல், 12 வரையும், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் மாலை நேரத்தில் தரிசிக்கலாம்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், ஆனி கருடசேவை, ஆடி கருட சேவை, ஆளவந்தார் சாற்றுமுறை, ஆடி பூரம் ஆகிய விழாக்கள் வருவதால், குறிப்பிட்ட நாட்களில், உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.ஜூலை, 1 முதல், ஆகஸ்ட், 17 வரை, காஞ்சிபுரம் நகருக்குள் உள்ள தனியார், அரசு என, அனைத்து வகையான பள்ளிகளும், மதியம், 1:30 மணி வரை மட்டுமே செயல்படும் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய காலை, 11:00 முதல், 12:00 மணி வரையும், மாலை, 5:00 முதல், 6:00 மணி வரையும் அனுமதிக்கப்படுவர்.சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய, ஒரு நபருக்கு, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், 'ஆன்லைன்' மூலம் அவை வசூலிக்கப்படும் எனவும் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.இணையதள பெயர், பதிவு நேரம் பிறகு அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது


4. அத்தி வரதர் தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்தி வரதரைத் தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.

5. பொது தரிசனம், சிறப்புத் தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்புத் தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாகத் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6. ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சன்னிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரைத் தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

7. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

8. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைத்திருக்கிறார்கள். மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதி பள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

10. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்திற்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

11. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22 தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு இயந்திரங்களும், வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 6 புதிய சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

12. குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலமாகக் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

13. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும், கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. அத்தி வரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். உணவின் மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்யப்படும். அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சுமார் 300 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அந்த உணவகங்களிலிருந்து வரும் உணவுகள் தினமும் பரிசோதனை செய்யப்படும்.

15. பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களைத் திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.அத்திவரதர்

திருவிழாவிற்காக சிறப்பு முன் ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் அத்திவரதர் வைபவம் - 2019 வருகிற ஜீலை மாதம் 01.07.2019 முதல் 17.08.2019 வரை நடைபெறுவதை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
காஞ்சிபுரம் நகரத்தில் ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக வாகன நிறுத்தும் இடத்திலிருந்து திருக்கோயில் அருகில் வருவதற்கு 10 பேருந்துகளை 10 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிபள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒளிமுகமதுபேட்டை என தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் 70 கழிப்பிடங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22 தற்காலிக கழிப்பிடம் கூடுதலாக அமைக்கவும், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 எண்ணிக்கையும், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 எண்ணிக்கையும் கழிப்பிட வசதி அமைத்திடவும், மேலும் தற்காலிக பேருந்து மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு இயந்திரங்களும், வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு இயந்திரங்களும் பொருத்தப்படவுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் 6 புதிய சுத்தகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளது. 5000 லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்தேக்க குடிநீர் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்க நகராட்சி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
         திருக்கோயில் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை நகரை சுற்றி முக்கிய பகுதிகளில் சிசிடிவி கருவி அமைத்து கண்காணிக்கும் பணி. கூடுதல் பாதுகாப்பு பணிக்காக ஊர்க்காவல் பணியாளர் , உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவர்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்காலிக பேருந்து நிறுத்தும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் வாகன மண்டபம், திருமங்கையாழ்வார் சன்னதி, மேற்கு மாடவீதி, வாலாஜாபாத் நுழைவு தற்காலிக வாகன நிறுத்தம், தற்காலிக பேருந்து நிறுத்தம். 108 ஆம்புலன்ஸ் உடன் கூடிய தற்காலிக மருத்துவ அறை, தொற்று நோய் கட்டுப்பாட்டு குழு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் அனைத்து மருத்துவர்களும் பணியாற்ற சுகாதார துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் ஒதுக்கப்பட்ட இடங்களில் சுத்தமாகவும், சுகாதாரத்துடன் தராமான உணவுகளை அன்னதானமாக வழங்க உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிலின் வரலாறு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில்

வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருப்பணி கி.பி. 848-ஆம் ஆண்டு தொடங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.பி. 1053-ஆம் ஆண்டுகளில் சோழர்கள் காலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தியதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. 14-ஆம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபங்களை நிறுவினர். அந்தக் காலகட்டத்தில் மூலவர் சன்னதியின் வெளிப் பிரகாரத்திலும், கோயில் உள் பிரகாரத்திலும் அரிய வகை மூலிகைகளால் ஆன வண்ண ஓவியங்களை தீட்டினர். மகா விஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் வகையில் தசாவதாரக் காட்சிகள், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை, பள்ளி கொண்ட பெருமாள் போன்ற வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. இறுதியில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் திருப்பணி நிறைவடைந்தது.
இப்பொழுது அந்த ஓவியங்களை நாம் பார்வையிட்ட போது, கிட்டத்தட்ட அவை அனைத்தும் தற்காலத்தில் எந்த அளவிற்கு ஒரு ஓவியத்தை பல வண்ணங்களில் வரையும் முடியுமோ அதை விட ஒரு படி மேலே சென்று வரைந்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த ஓவியங்கள் இன்னும் கண்ணை கொள்ளை கொள்ளும் அழகுடன் சிறந்த வேலைப்பாடுகளையும் கொண்டு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்த ஓவியத்தில் மிக நுட்பமான வேலைப்பாடுகளும், அந்த இடத்தில் நுட்பமான வர்ணம் பூசப்பட்டுள்ளது. அப்பொழுதே பல வர்ணங்களை பயன்படுத்தி இருப்பது ஆச்சரியத்தை உண்டு படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.