ETV Bharat / state

அத்திவரதர் வைபவத்தின் 45ஆவது நாள்: ராஜ மகுடத்துடன் பக்தர்களுக்கு தரிசனம்! - athivarathar devotee

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின் 45ஆவது நாளான இன்று இளஞ்சிவப்பு வண்ண பட்டாடை, ராஜ மகுடம் அணிந்தவாரு பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார்.

அத்தி வரதர்
author img

By

Published : Aug 14, 2019, 7:07 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தின் 45ஆம் நாளான இன்று, இளஞ்சிவப்பு வண்ண பட்டாடை, ராஜ மகுடம் அணிந்தவாரு பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். இவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.

இந்த வைபவத்தின் 44ஆம் நாளான நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில், பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அத்திவரதர் வைபவம் தொடங்கி 45 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 92 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நாளை இரண்டு மணியுடன் விஐபி தரிசனம் முற்றிலுமாக நிறைவடைகிறது.

அத்திவரதர்

நாளை ஆடி கருடசேவையை முன்னிட்டு மாலை ஐந்து மணி வரை மட்டுமே அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை இரண்டு மணியளவில் நுழைவு வாயில் மூடப்பட்டுவிடும் என்பதால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி நிறைவடையும் நிலையில், கடந்த 44 நாட்களில் தற்காலிகமாக வைத்துள்ள ஆறு உண்டியல்களில் ஆறு கோடியே 81 லட்சம் ரூபாயை இதுவரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Intro:காஞ்சிபுரம் அத்திவரதர் 45வது நாள்Body:காஞ்சிபுரம், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 45 ஆம் நாள் இளம் ரோஸ் வண்ண பட்டாடை அணிந்து ராஜா மகுடம் அணிந்தவாரு பக்தர்களுக்கு காட்சியருளும் ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

நேற்று 44 வது நாளான நள்ளிரவு 2 மணியளவில் பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்

இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.

44 நாட்களில் 92 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இன்னும் 2 நாட்களே அத்தி வரதர் வைபவம் காண முடியும் என்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை 2 மணியுடன் விஐபி தரிசனம் முற்றிலுமாக நிறைவடைகிறது.

நாளை ஆடி கருடசேவை முன்னிட்டு மாலை 5 மணி வரை மட்டுமே அனைத்து தரிசனம் அனுமதி. 2 மணியளவில் நுழைவு வாயில் மூடப்பட்டுவிடும்

சுமார் 4 மணி நேரமாக 3 கிமீ தூரத்தில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

ஆகஸ்ட் 16 அன்றுடன் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி நிறைவு

*உண்டியல்*

கடந்த 44 நாட்களில் தற்காலிகமாக வைத்துள்ள 6 உண்டியலில் 6 கோடியே 81 லட்சத்து ரூபாய் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளார்கள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.