காஞ்சிபுரம் கம்மாள தெரு மார்க்கெட் பகுதியில் பிரசித்திப் பெற்ற அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று மயான கொள்ளை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு 136ஆவது மயான கொள்ளை திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
24 கைகளைக் கொண்ட அங்காள பரமேஸ்வரி சிலைக்கு பல்வேறு பூவால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த ஊர்வலமானது கோயிலிலிருந்து தொடங்கி பூக்கடை சத்திரம் வழியாக நான்கு ராஜவீதிகளைக் கடந்து பழைய ரயில்வே சாலையில் உள்ள இடுகாட்டில் நிறைவுபெற்றது.
ஊர்வலத்தின் முன்பு பக்தர்கள் அனைவரும் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது பக்தர்கள் பலர் அருள்வந்து ஆடினர். மேலும் மூன்று ராட்சஷ கிரேன் மூலம் பக்தர்கள் சிலர் தங்களது முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து குவிந்தனர்.
இதையும் படிங்க: