காஞ்சிபுரம்: சுந்தர் - முருகம்மாள் தம்பதியின் 25 மகனான கணேஷ். டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட கணேஷ் தொடக்கத்தில் நண்பர்கள், உறவினர்களுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்து வந்துள்ளார்.
கணேஷ் தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்படப் பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, இசைஞானி இளையராஜா எனப் பலரது ஓவியங்களையும் தத்ரூபமாக தனக்கே உரிய பாணியில் வரைந்துள்ளார்.
-
ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
— anand mahindra (@anandmahindra) May 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.. https://t.co/9nAyMAlUAK
">ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
— anand mahindra (@anandmahindra) May 23, 2022
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.. https://t.co/9nAyMAlUAKஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
— anand mahindra (@anandmahindra) May 23, 2022
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.. https://t.co/9nAyMAlUAK
மேலும் 'தான் வறுமையில் வாடுவதால், தமிழ்நாடு அரசு தன்னுடைய ஓவியத்திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஓவியம் சார்ந்த துறையில் தனக்கு ஏதேனும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அன்னையர் தினத்தில் 'இட்லி பாட்டிக்கு' வீடு பரிசளித்த ஆனந்த் மகேந்திரா!