ETV Bharat / state

எம்.எல்.ஏ சம்பளத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்துவேன் - அமமுக வேட்பாளர் ரஞ்சித் - அமமுக வேட்பாளர் ரஞ்சித்

காஞ்சிபுரம்: அமமுக சார்பில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.வி. ரஞ்சித் குமார், வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

ammk
ammk
author img

By

Published : Mar 18, 2021, 10:56 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கட்சி சார்பில் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி. ரஞ்சித் குமார் போட்டியிடுகிறார். வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில் வெற்றி பெறவேண்டி 1008 தேங்காய்களை உடைத்த அவர், பின்னர் மாவட்ட வழங்கல் அலுவலரும், உத்தரமேரூர் தேர்தல் அலுவலருமான பாபுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டப்பேரவை உறுப்பினருக்கு வழங்கப்படும் ஊதியம் முழுவதையும் உத்தரமேரூர் தொகுதியிலுள்ள ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்துவேன். அதை ஒருபோதும் எனது குடும்பத்திற்கு பயன்படுத்த மாட்டேன்.

அமமுக வேட்பாளர் ரஞ்சித் வேட்புமனு தாக்கல்

சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி் அனைத்தும் முழுமையாக எவ்வித முறைகேடுகளும் இலலாமல் மக்கள் நல திட்டங்களுக்கு அளிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் வெற்றி பெறமாட்டார் என்று கூறினார்.

உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஆர்.வி. ரஞ்சித் குமார், அதிமுகவிலிருந்து விலகி, டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.