காஞ்சிபுரம்: உத்தரமேரூரில் உள்ள தனியார் விடுதிகளில் தொடர்ந்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று (ஜூன்.21)திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ராயர் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையில் இரண்டு பெண்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் கார்த்திக், வீரராகவன் ஆகிய இருவரும் தனிமையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக், வீரராகவன், தனியார் விடுதி மேலாளர் சபாபதி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் சட்டத்திற்கு புறம்பாக, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், அவர்களுக்குத் துணைபோகும் விடுதி உரிமையாளர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும்!'