காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கிளியாறு, வைப்பணை ஆற்றுப் பகுதியில், மணல் கொள்ளை நடப்பதாக உத்திரமேரூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் துறையினர் அப்பகுதியில் ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது, வைப்பணை ஆற்றிலிருந்து மணல் கடத்திவந்த 10 மாட்டுவண்டிகளை மடக்கிப்பிடித்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (36), பாரதி (27), வாசு (32), நீலமேகம் (45), மாரியப்பன் (24), வேல்முருகன் (35), எத்திராஜ் (37), சிவலிங்ககம் (30), ஏழுமலை (45), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜீ (36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 10 பேரையும் கைதுசெய்த காவல் துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்திய மாட்டு வண்டிகளைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அமராவதி ஆற்றில் மணல் கடத்தியவர் கைது: 2 வாகனங்கள் பறிமுதல்