கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சுமதி, சுஜாதா என்ற மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் சின்னசாமி திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
இளைய மகள் சுஜாதா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்தவர் இப்போது மூன்று மாத ஆண்குழந்தையுடன் வசித்துவருகிறார். இந்த நிலையில் கடந்தவாரம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பத்தில் வசித்துவந்த மூத்தமகள் சுமதி தனது ஒரு வயது மகள் ஸ்ரீ நிதியுடன் தாய் வீட்டிற்கு வந்தார்.
சின்னசாமி கூலி வேலைக்கு பெங்களூரு சென்றுவிட்ட நிலையில் அம்மா வயல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அக்கா சுமதியும் தங்கை சுஜாதாவும் தங்கள் குழந்தைகளோடு இருந்துள்ளனர்.
இதனையடுத்து சுமதி தீயில் எரிந்த நிலையில் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாண கோலத்தில் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் ரத்தம் கொட்டியவாறும் அலறி துடித்த வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். அதே நேரத்தில் சுமதியின் குழந்தை ஸ்ரீ நீதியும் தீயில் எரிக்கப்பட்டு தீக்காயங்களுடன் அலறியது.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சை தொடர்புகொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதலில் அருகிலுள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கும், அதனைத் தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் சுமதியும் ஸ்ரீ நீதியும்அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சுமதி உயிரிழந்தார்
ஸ்ரீ நீதி பலத்த காயம் அடைந்தால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஸ்ரீ நீதியும் உயிரிழந்தது.
சுமதிக்கு பேய் பிடித்ததால் தன்னைத்தானே வெட்டிக் கொண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார் என்றும் வரஞ்சரம் காவல் நிலையத்தில் சின்னசாமி புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.