கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாத்தனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதந்துள்ளது. சடலத்தை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் எடைக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து எடைக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பதை குறித்தும், கொலையா? தற்கொலையா? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குளிக்கும்போது கடலில் மூழ்கிய இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு!