ETV Bharat / state

நிலத்தகராறு காரணமாக விவசாயி கொலை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

land issue
uluntherpettai land issue one man murder
author img

By

Published : Jun 3, 2020, 3:43 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தத நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 01) இரவு இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்பொழுது முருகன் அண்ணன் சுந்தரம் தனது தம்பிக்கு ஆதரவாக மகேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மகேந்திரனின் உறவினர் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் மற்றும் இவரது உறவினர்கள் குமார், திவாகர், சுபாஷ் உள்ளிட்டோர் சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த அருள் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரத்தின் வயிற்றில் குத்தியுள்ளார், இதில் பலத்த காயமடைந்த சுந்தரம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முருகன் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் அதன்பேரில் காவல்துறையினர் அருள், குமார் உட்பட ஐந்து பேரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட சுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூரில் அமுமுக பிரமுகர் வெட்டிக் கொலை: கும்பல் வெறிச்செயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.