ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் இரண்டு லாரிகள் விபத்து: சோப்பு, நெல்லை அள்ளிச்சென்ற மக்கள்! - செங்குறிச்சி லாரி விபத்து

கள்ளக்குறிச்சி: இரண்டு இடங்களில் விபத்துக்குள்ளான லாரிகளிலிருந்து சரிந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான சோப்புப் பெட்டிகள் மற்றும் அரிசி மூட்டைகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்  கள்ளக்குறிச்சி லாரி விபத்து  செங்குறிச்சி லாரி விபத்து  lorry accident in uluntherpettai
கள்ளக்குறிச்சியில் இரண்டு லாரிகள் விபத்து: சோப்பு, நெல்லை அள்ளிச்சென்ற மக்கள்
author img

By

Published : May 11, 2020, 7:20 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் புதுச்சேரியிலிருந்து சேலத்திற்கு லோடு லாரியை ஓட்டிச்சென்றுள்ளார். இந்த லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமம் அருகே வந்துகொண்டிருந்தபோது லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் லாரி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்பிலான சோப்பு பெட்டிகள் சரிந்து விழுந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் சென்று பெட்டிகளை அள்ளிச் சென்றனர். இதேபோல், செஞ்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று பாதி வழியில் எதிர்பாராத விதமாக சாலையின் இடது புறத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் இருந்த நெல் மூட்டைகள் சாலையிலேயே சரிந்து விழுந்ததைப் பார்த்த கிராம மக்கள் அவற்றை அள்ளிச் சென்றனர்.

இந்த இரண்டு விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் பிடியில் இருந்து குறைந்த அளவிலான நெல் மூட்டைகளையும், சோப்பு பெட்டிகளையும் பாதுகாத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புகைப்படக் கலைஞர்களுக்கு அரசு உதவ வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.