ETV Bharat / state

அரசு அனுமதி பெறாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு சீல்! - treatment of corona patients

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே அரசின் அனுமதி பெறாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனைக்கு சீல்
தனியார் மருத்துவமனைக்கு சீல்
author img

By

Published : Jun 2, 2021, 8:58 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அரசின் அனுமதி பெறாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் சதீஷ்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இத்தகவலின்படி இன்று (ஜூன்.02) தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளை அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, மருத்துவமனையை இழுத்து மூடி சீல் வைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையும் படிங்க: கரோனாவிலிருந்து விரைந்து மீள உதவும் வேலூர் சிறப்பு சித்தா மையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.