ETV Bharat / state

கூவாகம் திருவிழா - பாதுகாப்பு வேண்டி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு - கூவாகம் திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் திருவிழாவிற்கு 40,000 மேற்பட்டோருக்கு கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட திருநங்கைகள் சார்பில் மனு அளித்தனர்.

பாதுகாப்பு வேண்டி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

author img

By

Published : Apr 5, 2022, 1:51 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவானது திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டு காலமாக கரோனா தாக்கத்தால் திருவிழாவானது நின்றுபோனது. இதனிடையே இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவானது வருகிற பதினெட்டாம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இத்திருவிழாவிற்கு வெளி மாநிலமான மகாராஷ்டிரா,கர்நாடகா கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திருநங்கைகள் திருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும், திருவிழாவின் போது திருநங்கைகள் தங்குவதற்கு கூடாரம் அமைக்க கோரியும், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துனர்.

பாதுகாப்பு வேண்டி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

அதேபோல் பொதுமக்கள் உட்பட 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என் ஸ்ரீதரிடம், மாவட்ட திருநங்கைகள் சார்பில் மனு அளித்தனர்.

மேலும் மூன்று ஆண்டு காலமாக திருவிழா நடைபெறாமல் இருந்ததால், இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழவானது வெகு விமரிசையாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'சிங்கிள் பசங்க அப்படிதான்' காவல் நிலையம் முன்பு பிறந்த நாள் கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.