கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச்சேர்ந்த மொட்டையன் மகன் ஏழுமலை. இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு மனைவி சங்கீதா மற்றும் மகன்கள் வேடியப்பன், மணி ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக மொட்டை அடித்து, காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த உறவினர்கள் அவருக்கு மொட்டை அடித்து தாய்மாமன் மடியில் அமர வைத்து காது குத்தினர்.
அவர்களது குலதெய்வக்கோயிலில் நடந்த இந்நிகழ்வில் அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. தனது 5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் நிறைவேற்றியதால் ஏழுமலை நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ரஜினிமுருகன் என்னும் திரைப்படத்தில் வயது வந்த இளைஞராக நடித்த சூரிக்கு, காதுகுத்துவதுபோல் இடம்பெற்ற காட்சி போல், ஒரு நிஜ சம்பவம் நிகழ்ந்துள்ளது, பலரையும் திரும்பிப்பார்க்கவைத்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்... 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்