கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே இருந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து சென்னையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, கள்ளக்குறிச்சி குற்றவியல் பிரிவு காவலர்கள் கைதுசெய்தனர்.
கள்ளக்குறிச்சியில் 2005 செப்டம்பர் 15 அன்று பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் மீது கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிந்து குற்றவாளியைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இந்த வழக்கு சம்பந்தமாகக் குற்றவாளியைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான காவலர்கள் நேற்று (ஆகஸ்ட் 6) சென்னையில் உள்ள எர்ணாவூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்துகொண்டு தலைமறைவாக இருந்த வேலுசாமியை கையும், களவுமாகப் பிடித்து கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெண் அலுவலரைத் தப்பா பேசாதீங்க - அறிவுறுத்திய கிராம உதவியாளரை காலில் விழவைத்த கொடுமை!