ETV Bharat / state

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைப்பு!

author img

By

Published : Apr 7, 2021, 10:32 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பரேவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு இன்று (ஏப். 7) சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதியில் நேற்று (ஏப். 6) விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில், வாக்குச்சாவடி மையங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான ஏகேடி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.0

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைப்பு

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய நான்கு சட்டப்பரேவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தனித்தனி அறையில் வைக்கப்பட்டன.

பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் பொது பார்வையாளர் சந்திரகேர் வாலிம்பே மற்றும் ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் இந்துமல்கோத்ரா, காவல் துறை மேற்பார்வையாளர் அனுராதா சங்கர், அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைப்போல வாக்கு எண்ணும் மையத்தில் 59 சிசிடிவிக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.