கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட ராணுவ விமான தளம் சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த விமான தளம் பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி பழுதடைந்து, வேளாண் பொருள்களை உலர்களமாக விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விமான தளத்தைப் புதுப்பித்து மீண்டும் ராணுவ விமான தளம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.
இதையடுத்து எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த விமான தளத்தை மீண்டும் புதுப்பிக்க நேற்று (பிப். 4) விமான ஓடுதளத்தை ராணுவப் பாதுகாப்பு அளவீட்டுப் பிரிவு அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயம்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவர்கள்