கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் ஒன்றியத்திற்குள்பட்ட ஈய்யனூருக்கும் ஒகையூருக்கும் இடையில் பாலம் வேலை நடைபெற்றுவந்த நிலையில் அண்மையில் முடிவடைந்தது. தொடர்ந்து, ஒகையூருக்குப் பேருந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேருந்து செல்லவில்லை.
இது குறித்து போக்குவரத்து அலுவலர்களிடம் ஒகையூர் கிராம மக்கள் காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அலுவலர்கள் பாலப்பணி முழுமையடையாததால் பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலம் கட்டிய தரப்பிலிருந்து இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக பேருந்து ஊருக்குள் வராததால் அவசரத் தேவைக்காக பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்துசெல்கின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசுப்பேருந்துக்குள் விழுந்த மழை - குடையுடன் ஊர் சென்ற பயணிகள்