ETV Bharat / state

சாராயத்தை சாலையின் நடுவே கொட்டி தீயிட்டுக் கொளுத்தி பொதுமக்கள் மறியல் - Public road blockade

கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்பவர்களை கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள் சாராயத்தை சாலையின் நடுவே கொட்டி தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாராயத்தை நடு ரோட்டில் கொட்டி தீயிட்டுக் கொளுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Apr 27, 2021, 10:05 AM IST

கள்ளக்குறிச்சி: பொராசக்குறிச்சி கிராமத்தில் அதிகப்படியான கள்ளச்சாராயம் விற்பதைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-அடரி சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மேலும், 150 லிட்டருக்கு மேற்பட்ட கள்ளச்சாராயத்தையும் பேரலுடன் சாலையின் நடுவே வைத்து சாராய விற்பவர்களைக் கைதுசெய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வரஞ்சரம் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கலைந்து சென்ற பொதுமக்கள் அப்போது திடீரென கள்ளச்சாராயத்தை சாலையின் நடுவே கொட்டி தீயிட்டுக் கொளுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியில் கோளாறு: ஆந்திராவில் 2 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.