கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு தமிழ்நாடு அளவில் நலவாரியம் அமைக்க வலியுறுத்தியும், கடந்த 10 ஆண்டுகளாக கறிக்கோழியின் ஆதார விலை ரூ 3.50ஐ ரூ 12ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், கோழிப்பண்ணையாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தியும் மேலும் ஆண்டுதோறும் ஒரு முறை கோழி வளர்ப்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.