மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட வந்தவர்களை ரயில் நிலையம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாள்: ஓபிஎஸ் மரியாதை!