ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு - Special Investigation Team

கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் குடும்பத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatகள்ளகுறிச்சி மாணவி செல்போனை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Nov 14, 2022, 10:57 PM IST

சென்னை:கனியாமூர் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்தில் நியாயமான விசாரணை நடத்தக்கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த நீதிமன்றம், அதன் அறிக்கைகளை பெற்று ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணைக் குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போனை குடும்பத்தார் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் எனவும், அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். உடற்கூராய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, உடற்கூராய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என தெரிவித்ததுடன், நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனு தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி வழக்கு...குண்டர் சட்டத்தில் கைதானவரை விடுவிக்க கோரி மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.