கள்ளக்குறிச்சி: சு. ஒகையூர் கிராமத்தில் வசித்துவரும் பூமாலை என்பவர் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் பப்பாளி பழத்தைச் சாகுபடி செய்து சென்னை, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்துவந்துள்ளார்.
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் அதிகம் இருப்பதால் பப்பாளி ஏற்றுமதி செய்ய ஆட்கள் செல்லவில்லை. இதனால் மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்ட பப்பாளி பழம் மரத்திலேயே அழுகி வீணாகியுள்ளது.
சென்ற முறை பப்பாளி 10 ரூபாய் வரை லாபம் கிடைத்த நிலையில் தற்போது வெறும் 4 ரூபாய்க்கு கேட்பதாகப் பூமாலை வேதனை தெரிவித்துள்ளார்.
ஐந்து லட்சம் ரூபாய் செலவுசெய்து பப்பாளி சாகுபடி செய்ததில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பயிர் இழப்பீடு நிவாரணத் தொகையை முதலமைச்சர் வழங்குமாறு பூமாலை கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பப்பாளி விளைச்சல் இருக்கு; விலை இல்லை... கிலோ ரூ.5 முதல் 7 வரை: விவசாயிகள் வேதனை!