கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், வெளியே ஊர் சுற்றித் திரிவதால் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கரோனா வைரஸ் தொற்றின் வீரியம் குறித்தும், அவற்றால் ஏற்படும் ஆபத்து குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த ஓவியர்கள் இணைந்து சாலைகளில் கரோனா வைரஸின் புகைப்படத்தை ஓவியமாக வரைந்துள்ளனர்.
ஓவியத்தில் "அனைவரும் வீட்டில் இருப்போம், கரோனாவை ஒழிப்போம்" என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு ஓவியத்தை அம்மாவட்ட டிஐஜி சந்தோஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, ஓவியம் வரைந்தவர்களை வெகுவாகப் பாராட்டியதோடு, வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவருடன் உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 6 பேரை தனிமைப்படுத்தி தீவிரக் கண்காணிப்பு!