கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் ஆஞ்சநேயர் கோயில் எதிரில், ஆவலம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த கடையநல்லூர் திமுக ஒன்றிய செயலரின் கார் பழனி மீது அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட பழனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த திருநாவலூர் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக முண்டியப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீசையால் சிக்கிய தி.நகர் நகைக்கடை கொள்ளையன் - போலீஸ் விசாரணையின் முழு விவரம்!